Nokia நிறுவனத்தின் புதிய Rugged Smartphone ஆக Nokia XR20 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீர் எதிர்ப்பு, கீழ் விழுந்தால் அதை தங்குவது, தரமான ஆடியோ மற்றும் கேமரா அம்சங்கள் மற்றும் தற்கால பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டி தரும் அம்சஙகள் என பார்க்கும் போதே வாங்க ஆசையை கிளப்பும் இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன, வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது, இதோ முழு விவரங்கள்.

நோக்கியா எக்ஸ்ஆர் 20 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து நோக்கியா பிராண்ட் உரிமதாரர் ஆன எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி 30 என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை நோக்கியா சி தொடரில் மிகப்பெரிய டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரியுடன் அறிமுகம் செய்தது.
உடன் நோக்கியா 6310 (2021) பீச்சர் போனும் நிறுவனத்தின் ஒரிஜினல்ஸ் பீச்சர் போன் தொடரின் ஒரு புதிய உறுப்பினராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நிறுவனத்தின் புதிய ட்ரூலி வயர்லெஸ் (TWS) இயர்பட்ஸ், மோனோ ஹெட்செட் மற்றும் வயர்டு ஹெட்ஃபோன்ஸ் உள்ளிட்ட புதிய ஆடியோ தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இக்கட்டுரையில் நோக்கியா எக்ஸ்ஆர் 20 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
விலை மற்றும் விற்பனை:
நோக்கியா எக்ஸ்ஆர் 20 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.43,800 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிலும் வருகிறது, ஆனால் அதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
வண்ண விருப்பங்களை பொறுத்தவரை, நோக்கியா எக்ஸ்ஆர்20 மாடலில் தேர்வு செய்ய கிரானைட் மற்றும் அல்ட்ரா ப்ளூ ஷேட்ஸ் உள்ளன.
நோக்கியா எக்ஸ்ஆர் 20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
- டூயல் சிம் (நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- மூன்று ஆண்டுகள் வரை வழக்கமான ஆண்ட்ராய்டு ஓஎஸ் பதிப்பு மேம்படுத்தல்கள்
- நான்கு ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்
- 20: 9 திரை விகிதம்
ConversionConversion EmoticonEmoticon